தலையில் பூச்சூடி போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் - காரணம் என்ன தெரியுமா?
Myanmar protest
By Petchi Avudaiappan
மியான்மர் நாட்டில் மக்கள் தலையில் பூச்சூடி போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
அந்நாட்டில் கடந்த பிப்ரவரி முதலே ராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு தினந்தோறும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஆங் சாங் சூச்சியின் 76வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது ஆதரவாளர்கள் தலையில் பூச்சூடி, அதனுடன் வீதியில் இறங்கி பேரணி நடத்தியுள்ளனர்.
ஆங் சாங் சூச்சி பெரும்பாலும் தலையில் பூச்சூடிக் கொள்வது வழக்கம். அதனை நினைவு படுத்தும் வகையிலே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பூக்களை சூடிக் கொண்டனர்.