மியான்மரில் ஒரு மாதத்திற்கு மேலாக தொடரும் போராட்டம்
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் ஒரு மாதத்திற்கும் மேலாக நடைபெற்று வருகிறது. மியான்மரில் கடந்த மாதம் பிப்ரவரி 1ஆம் தேதி ராணுவத்தினர், ஆட்சியை கைபற்றியதை தொடர்ந்து, ராணுவ ஆட்சியை திரும்ப பெறக் கோரி நாடு முழுவதும் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுகிழமை மாண்டலேயில், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பேராசிரியர்கள் அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதை கலைக்க கண்ணீர் புகைக்குண்டுகளை பாதுகாப்பு படையினர் வீசினர், இதனால் அந்த இடமே பரபரப்பானது. மேலும் வீடுகளுக்குள் புகுந்த தப்பிக்க முயன்றவர்களை, பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 50க்கும் மேற்பட்டோர் சுட்டுக் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.