மியான்மரில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம் : அச்சத்தில் பொதுமக்கள்
By Irumporai
மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கத்தால் அங்கு மக்கள் பதற்றம் அடைந்துள்ளனர்.
மியான்மரில் நிலநடுக்கம்
மியான்மர் நாட்டில் கடந்த 24 மணிநேரத்திற்குள் அடுத்தடுத்து 3 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன. மியான்மார் நாட்டின் யாங்கன் நகரில் நேற்று முதல் இன்று காலை வரை மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டு மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

அச்சத்தில் மக்கள்
நேற்று இரவு 11.56 க்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4 ஆகவும், இன்று அதிகாலை 2.53 மணிக்கு 4.2 ரிக்டர் அளவிலும், இன்று காலை 5.42 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆகவும் பதிவாகியுள்ளதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.