மியான்மர் மாணிக்க சுரங்கத்தில் நிலச்சரிவு : 70 பேர் மாயம்!

myanmar landslide
By Irumporai Dec 22, 2021 06:34 AM GMT
Report

மியான்மரில் பச்சை மாணிக்க கற்கள் வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.இந்த நிலச்சரிவில் மாணிக்க கற்கள் வெட்டியெடுக்கும் பணியில் இருந்த 70 பேர் காணவில்லை என்று கூறப்படுகிறது.

மியான்மர் நாட்டில் பகந்த் என்ற இடத்தில் பச்சை மாணிக்க கற்களை வெட்டியெடுக்கும் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அங்கு வேலைசெய்த 70பேரை காணவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

மியான்மர் மாணிக்க சுரங்கத்தில் நிலச்சரிவு :  70 பேர் மாயம்! | Myanmar Landslide Mine In Northern Myanmar

சட்டவிரோதமாக சுரங்கப்பணிகள் நடைபெற்றதால் அங்கு எவ்வளவு பேர் பணிபுரிந்தனர் என்ற விவரம் சரியாக தெரியவில்லை. அருகிலிருந்த ஏரியிலிருந்து அடித்துவந்த தண்ணீர் சுரங்கப்பகுதியில் இருந்த கழிவுகளுடன் கலந்து அதில் தொழிலாளர்கள் சிக்கியிருக்கிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.

காலை 7 மணிமுதல் அந்த இடத்தில் மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

ஏற்கனவே பகந்த் என்ற இடத்தில் கடந்த 2020 ஆண்டு நடைபெற்ற நிலச்சரிவில் 200 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.