திசையெங்கும் மரண ஓலம்; நிலநடுக்கத்தில் 1,000 பேர் பலி - இறப்பு 10,000யை தொடும் என அச்சம்
நிலநடுக்கத்தால் பலியானவர்களின் எண்ணிக்கை 1,000 ஆக உயர்ந்துள்ளது.
நிலநடுக்கம்
மியான்மர் நாட்டில் அடுத்தடுத்து இரண்டு பெரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. ரிக்டர் அளவில் 7.7 & 6.4 என்று பதிவாகியது.
சாகைங் நகரிலிருந்து வடமேற்கே 16 கிலோமீட்டர் தொலைவில், 10 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்திருந்தது.
தொடர்ந்து ஒரு கட்டிடம் மொத்தமாக இடிந்து விழுவதும், ஒரு கட்டிடத்தில் நீச்சல் குளம் குலுங்கி அதில் இருந்த தண்ணீர் மாடியில் இருந்து தெருவில் கொட்டுவது போன்ற காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1000 பேர் பலி
தொடர்ந்து இந்த தாக்கம் பாங்காக் நகரிலும் ஏற்பட்டு தற்போது கட்டப்பட்டு வந்த ஒரு கட்டிடம் முழுவதுமாகச் சரிந்து விழுந்தது. இந்த கடுமையான நிலநடுக்கத்திற்கு 1,000 பேர் பலியாகியுள்ளனர். 2,000-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக அமெரிக்காவின் புவியில் ஆராய்ச்சி நிறுவனம் (யூஎஸ்ஜிஎஸ்) சார்பில், ‛‛மியான்மர் நிலநடுக்கம் மிகவும் மோசமானது. இந்த நிலநடுக்கம் மோசமான சேதத்தை ஏற்படுத்தி இருக்கலாம். பலி எண்ணிக்கை என்பது 10 ஆயிரத்தை கடக்கலாம்'' என்று தெரிவித்துள்ளது.