மியான்மர் வெடிகுண்டு தாக்குதல் - 3 பேர் பலி... - 9 பேர் காயம்...!
மியான்மரில் இன்று மதியம் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மியான்மர் வெடிகுண்டு தாக்குதல்
மியான்மரின் பாகோ பகுதியில் உள்ள ரயில் நிலையத்தில் இன்று வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதில் 3 பேர் உயிரிழந்தனர். 9 பேர் காயமடைந்துள்ளனர். மியான்மர் மாநில நிர்வாக கவுன்சில், பாகோ பிராந்தியத்தின் நியாங்லெபின் டவுன்ஷிப்பில் குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக தகவல் குழு தகவல் தெரிவித்துள்ளது.
இந்த குண்டுவெடிப்பு மதியம் 12:20 மணியளவில் நடத்தப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலில் ஒரு ஆணும், பெண்ணும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 ஆண்களும், 7 பெண்களும் பலத்த காயமடைந்தனர். அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இத்தாக்குதல் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
