மியான்மர் ராணுவத் தலைவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அமெரிக்கா
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கையெழுத்திட்டுள்ளார். தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராணுவம், நாட்டை கைபற்றியது, அதோடு மூத்த நிர்வாகி ஆங் சான் சூச்சி மற்றும் மூத்த அரசியல் தலைவர்களை கைது செய்தது.
இந்த நிகழ்விற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மியான்மரின் ராணுவத் தலைவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். மியான்மரில் ராணுவ ஜெனரல்கள் அமெரிக்காவில் ஒரு பில்லியன் டாலர் சொத்துகளை கையாள்வதற்கு தடை விதிப்பதாக பைடன் கூறியிருக்கிறார்.
மேலும் பல நடவடிக்கைகள் எடுக்க உள்ளதாக குறிப்பிட்ட ஜோ பைடன், ராணுவம் அதிகாரத்தை கைவிட்டு, மியான்மர் மக்களின் விருப்பத்திற்கு மரியாதை அளிக்க வேண்டு்ம் என கூறியுள்ளார்.
மியான்மரின் ராணுவத் தலைவர்களுக்கு பயனளிக்கும் அமெரிக்க சொத்துகளை முடக்குவதற்கு தனது நிர்வாகத்தை அனுமதிக்கும் என்று அதிபர் பைடன் கூறியுள்ளார்.