மியான்மரில் ராணுவ ஆட்சி தொடர்ந்தால் பொருளாதார தடை ஏற்படும் - ஜோ பைடன்
president
world
biden
By Jon
மியான்மரில் ராணுவ ஆட்சி தொடர்ந்தாள் பொருளாதார தடை ஏற்படும் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ளார். மியான்மரில் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபர் உள்ளிட்டோரை ராணுவம் கைது செய்ததுடன் ஓராண்டுக்கு அவசர நிலையையும் அறிவித்தது. இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் பைடன், ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றுவது நாட்டின் ஜனநாயகம் மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதான நேரடித் தாக்குதல் என்றார்.
ஜனநாயகம் நோக்கிய முன்னேற்றத்தின் அடிப்படையில் மியான்மர் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்கியதாகக் குறிப்பிட்ட அதிபர் ஜோ பைடன், அதிகாரத்தை ராணுவம் உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.