பள்ளி மீது குண்டுவீச்சு; 22 மாணவர்கள் பலி - சொந்த மக்களையே கொன்று குவிக்கும் ராணுவம்!
பள்ளியின் மீது குண்டு வீசியதில் 22 மாணவர்கள் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குண்டுவீச்சு
மியான்மரில் ராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்து வருகிறது. இதற்கு எதிராக மக்கள் கிளர்ச்சி இயக்கங்களும் ஆங்காங்கே செயல்பட்டு வருகின்றன. எனவே இதனை குறிவைத்து மியான்மர் ராணுவம் அவ்வப்போது தாக்கி வருகிறது.
இதில் 6,600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய மியான்மரின் சகாயிங் பகுதியில் உள்ள ஓஹே தெய்ன் ட்வின் கிராமத்தில் உள்ள ஒரு பள்ளியின் மீது ராணுவம் குண்டுவீசி வான்வழி தாக்குதல் நடத்தியது.
22 மாணவர்கள் பலி
அப்போது இந்த தாக்குதலில் 20 மாணவர்களும், 2 ஆசிரியர்களும் உயிரிழந்துள்ளனர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் அருகிலுள்ள 3 வீடுகள் சேதமடைந்தன. ஆனால், ராணுவம் இந்த தாக்குதலை ஒத்துக் கொள்ளாத நிலையில், சுயாதீன பத்திரிக்கைகளும், உள்ளூர் மக்களும் ராணுவம் தாக்கியதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேலும், இந்த தாக்குதலை எதிர்கட்சியான NUG கண்டித்துள்ளது.