நான் ஆசைப்பட்டது நடக்கல...நடிகை மீனா ஆதங்கம் - ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்

Rajinikanth Meena Ponniyin Selvan: I
By Thahir 2 மாதங்கள் முன்

தான் ஆசைப்பட்டது நடக்கவில்லை என்று நடிகை மீனா ஆதங்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது அவரது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

நாளை வெளியீடு

இயக்குநர் மணிரத்னம் இயக்கயத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “பொன்னியின் செல்வன்” இப்படத்தின் முதல் பாகம் நாளை வெளியாக உள்ளது.

இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடவும் சென்னை உயர்நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

மீனா ஆதங்கம் 

பொன்னியின் செல்வம் திரைப்படம் பற்றிய கருத்துக்கள் அதிகம் பேசப்பட்டு வரும் நிலையில், நடிகை மீனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

அந்த பதிவில், இதற்கு மேலும் என்னால் ரகசியமாக வைத்திருக்க முடியாது. எனக்கு பொறாமையாக உள்ளது. வாழ்க்கையில் முதல்முறையாக ஒருவர் மீது பொறாமை கொள்கிறேன்.

அது ஐஸ்வர்யா ராய், “பொன்னியின் செல்வன்” படத்தில் “நந்தினி” கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நந்தினி கதாபாத்திரம் குறித்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் பாராட்டு தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.