சிம்புவை காதலிக்கும் பிரபல நடிகையின் தங்கை - ஆச்சரியத்தில் ரசிகர்கள்

நடிகர் சிம்பு பற்றி சீரியல் நடிகை சாய் காயத்ரி தெரிவித்திருப்பது ரசிகர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் அனனைவரும் சேர்ந்து நன்றி தெரிவித்த வீடியோவை இயக்குநர் வெங்கட் பிரபு சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 

இதனிடையே சின்னத்திரை சீரியல்களில்  நடித்து வரும் சாய் காயத்ரி சிம்பு பற்றி அண்மையில் பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்து ஒன்று மீண்டும் பேசு பொருளாக மாறியுள்ளது.

 

அதில் சாய் காயத்ரி தங்கை  நடிகையாக வலம் வரும் நிலையில் அவர் 16 ஆண்டுகளாக சிம்புவை காதலிக்கிறார். நேரில் பார்க்க வாய்ப்பு கிடைத்தால் சிம்புவிடம் முதலில் தன் காதலை சொல்வார் என சாய் காயத்ரி கூறியுள்ளார். 

சிம்புவின் தம்பி, தங்கைக்கு திருமணமாகிவிட்ட நிலையில் விரைவில் அவருக்கும் திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மாநாடு படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பில் திருமணம் பற்றி கேட்டதற்கு, நல்ல பெண்ணாக இருந்தால் சொல்லுங்க சார் என்று சிம்பு பதிலளித்திருந்தார். 

இந்நிலையில்  சாய் காயத்ரியின் பேட்டி விளம்பரம் தேடும் யுக்தி என பலரும் விமர்சித்து வருகின்றனர். 

உலகின் அனைத்துப் பாகங்களிலும் இடம் பெறும் வெளிநாட்டு - உள்நாட்டு அரசியல், சினிமா மற்றும் பொருளாதாரத்தை உடனுக்குடன் அறிந்து கொள்ள லங்காசிறிக் குழுமத்துடன் இணைந்திருங்கள்