எனது போனும் பெகாசஸ் மூலம் ஒட்டு கேட்கப்பட்டது: மம்தா அதிர்ச்சி தகவல்
எனது போனும் ஒட்டு கேட்கப்பட்டது நான் எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச முடியவில்லை, என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
தியாகிகள் தினத்தை முன்னிட்டு இணையம் மூலமாக பேசிய மே.வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. பெகாசஸ் விவகாரத்தில் எனது போனும் ஒட்டு கேட்கப்பட்டது. ஆக்வே சரத்பவார், கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களுடன் பேச முடியவில்லை. பெகாசஸ் ஸ்பைவேர் மிகவும் ஆபத்தானது. நான் யாரிடமும் பேசவில்லை என கூறினார்.

மேலும் உளவு பார்ப்பதற்கு பணம் செலவு செய்யப்பட்டதே தவிர மக்களுக்கு பணம் செலவு செய்யப்படவில்லை.
மத்திய அரசை அடக்கி வைக்க வேண்டும்.இல்லாவிட்டால், நாட்டை அழித்து விடுவார்கள் என கூறிய மம்தா.
நீதித்துறையால் மட்டுமே நாட்டை காக்க முடியும் ஆகவேபெகாசஸ் விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட் தாமாக முன்வந்து விசாரணை நடத்த வேண்டும் என கூறியுள்ளார்.