கலாம் பெயரை திருப்பி போட்டால் என் பெயர் வரும்: யார் கூறியது தெரியுமா?
கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றிய அவரது உதவியாளர் பொன்ராஜ் இன்று மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார். அப்போது மறைந்த குடியரசு தலைவர் அப்துல்கலாமுடன் இணைந்து பணியாற்றிய அவரது உறவினர் பொன்ராஜ் கட்சியில் இணைந்தார்.
அப்போது பேசிய கமல்ஹாசன் காந்திக்கு பிறகு தேசமே கொண்டாடிய தலைவர் அப்துல்கலாம் , இந்தியாவுக்கான கனவுகளை நிறைவேற்ற சரியானவர்கள் இளைஞர்களும் மாணவர்களும் தான் என மொத்த இந்தியாவினையும் திரும்பி பார்க்க வைத்தவர் என பேசினார்.

மக்கள் நீதி மய்யத்தை நோக்கி நல்லவர்கள் வரவேண்டும் என அழைத்தேன் நாட்டுக்காக உழைத்தவர்கள் வந்துள்ளனர் என்றார்.
தொடர்ந்து பேசிய கமல்ஹாசன் கலாம் என்ற பெயரை திருப்பிப் போட்டால் கிட்டத்தட்ட என் பெயர் வரும் என்றார்.