என் கூட யார் வாறீங்க : சென்னை to கன்னியாகுமரி நடை பயணம் மேற்கொள்ளும் காயத்ரி ரகுராம்.

BJP Gayathri Raghuram
By Irumporai Jan 14, 2023 11:53 AM GMT
Report

ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடை பயணம் மேற்கொள்ள உள்ளதாக காயத்ரி ரகுராம் கூறியுள்ளார்.

காயத்ரி ரகுராம் நிரந்தர நீக்கம் 

காயத்ரி ரகுராம் அவர்கள் தலைவர் அண்ணாமலை அவர்களின் ஒப்புதலின்படி அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுவதாக பாஜக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பதிவில், ‘என் தொழிலைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெயரைக் கெடுத்ததற்கு நன்றி, என் பெண்மையை அவமானப்படுத்தியதற்கு நன்றி.

என் கூட யார் வாறீங்க : சென்னை to கன்னியாகுமரி நடை பயணம் மேற்கொள்ளும் காயத்ரி ரகுராம். | My Life Is Lost Gayathri Raghuram

என்னை மானப் பங்கம் செய்ததற்கு நன்றி, என் 8 வருட சேவை, கடின உழைப்பு மற்றும் பணத்தை எடுத்துக் கொண்டதற்கு நன்றி, எல்லாவற்றையும் பறித்த பிறகு என்னை தூக்கி எறிந்ததற்கு ஒரு பெரிய நன்றி என தெரிவித்திருந்தார்.

ஜனவரி 27 நடைபயணம் 

இந்த நிலையில், தற்போது பா.ஜ.க பெண்களை அவமானப்படுத்தியதற்காகவும், பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காததற்காகவும் ஜனவரி 27-ம் தேதி முதல் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை நடை பயணம் நடத்துவேன். தனியாக இருந்தாலோ அல்லது யார் வேண்டுமானாலும் என்னுடன் சேரலாம். எந்த அச்சுறுத்தலுக்கும் நான் பயப்படவில்லை.

என் உயிர் போனாலும் செய்வேன். நான் நீதிக்காக போராடுவேன். நான் அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவேன். இது அரசியலில் பொது சேவை மற்றும் பொது வாழ்க்கை பெண்களுக்கானது என தெரிவித்துள்ளார்.