Sunday, Jul 13, 2025

மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்!

M K Stalin Tamil nadu DMK Chennai Michaung Cyclone
By Jiyath 2 years ago
Report

மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நிவாரண தொகை

மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை வேளச்சேரியில் தொடங்கி வைத்தார்.

மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்! | My Journey Will Continue In Peoples Work Mk Stalin

இதனையடுத்து ரேஷன் கடைகளில் நிவாரண தொகை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பயணம் தொடரும்..!

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் "மழை காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட மக்களுக்கு நிவாரணமாக 6000 ரூபாய் வழங்கும் பணியைச் சென்னை வேளச்சேரியில் துவக்கி வைத்தேன்.

மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும் - முதல்வர் மு.க.ஸ்டாலின்! | My Journey Will Continue In Peoples Work Mk Stalin

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட தமிழ்நாடு அரசு 1486 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறுவர். மக்களின் துயர் நீக்க என்றும் மக்கள் பணியில் எனது பயணம் தொடரும்" என குறிப்பிட்டுள்ளார்.