என் கணவர் ரொம்ப நல்லவர் சார் அவருக்கு எதுவும் தெரியாது: ஆபாச பட விவகாரத்தில் ஷில்பா ஷெட்டி வாக்குமூலம்

ஆபாச படம் தயாரித்து விற்ற புகாரில் கைது செய்யப்பட்டுள்ள ராஜ் குந்த்ரா குற்றமற்றவர் என்று அவரது மனைவியும் நடிகையுமான ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.

ஷில்பாஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டியிடம் மும்பை குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது ஆபாச படத் தயாரிப்பில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து அவரிடம் சரமாரியாக கேள்விகள் எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த ஷில்பா ஷெட்டி தனக்கு மட்டுமல்ல தனது கணவர் ராஜ்குந்த்ராவுக்கும் ஆபாச படத் தயாரிப்பில் தொடர்பு இல்லை என்று கூறினார்.

ஹாட் ஷாட்ஸ் ஆபாச செயலியின் உள்ளடக்கங்கள் குறித்த விவரங்கள் ஏதும் தனக்கு தெரியாது என்றும் லண்டனில் உள்ள ராஜ் குந்த்ராவின் உறவினருமான பிரதீப் பக்ஷி என்பவர் தான் ஹாட் ஷாட்ஸ் செயலியை நிர்வகித்து வந்ததாகவும் மும்பை காவல்துறையில் ஷில்பா ஷெட்டி வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஐபிசி குழுமத்தின் அனைத்து தொலைக்காட்சிகள் மற்றும் வானொலிகளை உலகின் எப்பாகத்திலிருந்தும் இலவசமாக பார்த்தும் கேட்டும் மகிழ, ஐபிசி தமிழ் செயலியை பதிவிறக்கம் செய்யுங்கள்.

பதிவிறக்கம் செய்யுங்கள்