நிர்வாணமாக நின்று ஆபாச செயல் - கொழுந்தனார் மீது அண்ணி புகார்!
அண்ணியின் எதிரில் நிர்வாணமாக நின்று ஆபாச செயலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
நடந்தது என்ன?
சென்னை பழைய திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த பெண். திருமணம் முடிந்து கணவரின் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு கணவருடன் சென்ற பெண் புகார் ஒன்றை அளித்தார்.
ஆபாச செயல்
இதனையடுத்து புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்த மகளிர் போலீசார், பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆபாச செயல்களில் ஈடுபட்ட சுரேஷ்குமாரை கைது செய்தனர்.
அவர் மீது பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.
அந்த புகாரில் தனது கணவரின் தம்பியான சுரேஷ் குமார் என்பவர் தனக்கு பாலியல் தொந்தரவு அளித்து வருவதாகவும், அன்றைய தினம் தனது முன்பு நிர்வாணமாக நின்று ஆபாச செயல்கள் புரிந்து தன்னை பாலியல் உறவுக்கு அழைத்து மிரட்டியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பெண், போலீசாரின் உதவியை நாடியிருக்கிறார்.