'என் மரணம் தான் உனக்கு பரிசு, ஐ லவ் யூ' - காதல் தோல்வியால் இளைஞன் எடுத்த விபரீத முடிவு
சத்தீஸ்கர் மாநிலம் பாலோத் மாவட்டத்தை சேர்ந்த கரிகாலன் என்ற இளைஞர் ஒரு பெண்ணை தீவிரமாக காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்த பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமண எற்பாடு நடைபெற்றது.
இதை அறிந்த கரிகாலன் தனது காதலி வேறொருவரை திருமணம் செய்துக்கொள்ள போகிறார் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.
தான் காதலித்த பெண்ணை மறக்க முடியாமல் தவித்து வந்த கரிகாலன் தற்கொலை செய்ய முடிவு செய்து சுவரில், 'என் மரணம் தான் உன் திருமணப் பரிசு, ஐ லவ் யூ' என நிலக்கரியால் எழுதி வைத்துள்ளார்.
மேலும், தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்பு அதை வீடியோவாக பதிவு செய்து தனது வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் ஆகவும் அப்லோட் செய்துவிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார் அந்த இளைஞன்.
அவரது உடலை கைப்பற்றிய போலீசார் அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
முன்னாள் காதலியின் திருமணம் குறித்த செய்தி அறிந்து மனமுடைந்த இளைஞன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.