Wednesday, Jul 9, 2025

‘’தோனி செய்த உதவி இருக்கே என்ன சொல்றதுன்னே தெரியல ‘’ - உருகிய பிராவோ

dhoni CSK Dwayne Bravo
By Irumporai 4 years ago
Report

ஐபிஎல் கிரிக்கெட் அணியான சென்னை சூப்பர் கிங்ஸின் அசைக்க முடியாத சிறப்பான வீரராக பிராவோ சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் .

இது பற்றி அவர் பேசுகையில், 'நான் சென்னை அணியால் தக்கவைக்கப்படவில்லை தான். ஆனால் மீண்டும் விளையாட எனக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது.

எனவே ஏலத்தில் பங்கேற்பேன். அந்த ஏலத்தில் யார் என்னை எடுக்கிறார்களோ அவர்களுக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவேன்.

எந்த அணியில் நான் இடம் பெறுவேன் என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், விளையாடும் ஆர்வம் எனக்கு உள்ளது' என்றார். தோனி பற்றி பேசுகையில், 'நானும் தோனியும் வெவ்வேறு அம்மாக்களிடம் இருந்து பிறந்த சகோதரர்கள் என்று சொல்லிக் கொள்வோம் என கூறிய பிராவோ.

தோனிக்கும் தனக்கும் இடையில் மிகவும் வலுவான நட்பு உள்ளதாகவும்  கிரிக்கெட்டின் தூதராகவே பார்ப்பதாகவும்  நாங்கள் இருவரும் இணைந்து சிஎஸ்கே அணிக்காக பலவற்றைச் சாதித்து உள்ளோம் ,என்று தோனியைப் பாராட்டித் தள்ளியிருக்கிறார்.