என் அண்ணன் எப்பொழுதும் பயந்ததில்லை , மக்களோட அன்பு அவனுக்கு இருக்கு : பிரியங்கா காந்தி ட்வீட்

Indian National Congress Rahul Gandhi
By Irumporai Mar 23, 2023 10:43 AM GMT
Report

 குஜராத் நீதி மன்றம் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து பிரியங்கா காந்தி கண்டனக் கருத்து தெரிவித்துள்ளார்.

சூரத் நீதி மன்றம் தீர்ப்பு

காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி 2019 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது மோடி என்ற பெயர் கொண்டவர்கள் எல்லாம் திருடர்கள் என சர்ச்சையாக பேசியதற்கு எதிராக குஜராத் எம் .எல் .ஏ புர்னேஷ் தொடர்ந்த வழக்கில் , ராகுல் காந்தி குற்றவாளி என்றும் ,2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து குஜராத் சூரத் நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது . மேலும் தண்டனையை எதிர்த்து மேல் முறையீடு செய்ய உடனடி  ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.  

என் அண்ணன் எப்பொழுதும் பயந்ததில்லை , மக்களோட அன்பு அவனுக்கு இருக்கு : பிரியங்கா காந்தி ட்வீட் | My Brother Was Never Afraid Priyanka Gandhi

பிரியங்கா காந்தி எதிர்ப்பு  

ராகுல் காந்தி  சிறை தண்டனை  குறித்து , பிரியங்கா காந்தி கூறுகையில் பயந்து போன  மத்திய அரசு தனது கடுமையான நடவடிக்கைகள் மூலமாக  ராகுல் காந்தி குரல் வலை  நசுக்கப்  பார்க்கின்றது.

எனது சகோதரன் ஒரு போதும் பயப்பட மாட்டான்   அவன்  தொடர்ந்து உண்மையை மட்டுமே பேசுவான்  இந்த நாட்டு மக்களின் குரலாக ஒலித்துக் கொண்டே இருப்பான் . உண்மையின்  சக்தியும் ,நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் அன்பும் அவனுக்கு இருக்கிறது   எனத்  தெரிவித்துள்ளார் .