மட்டன் சாப்பாடு ரூ.11 ஆயிரம் - அதிர்ந்து போன உணவு பிரியர்கள்
இலங்கையில் உள்ள உணவகம் ஒன்றில் மட்டன் வகை உணவு ஒன்றுக்கு ரூ.11 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்ட விவகாரம் இணையத்தில் பேசு பொருளாக மாறியிருக்கிறது.
கொந்தளிக்கும் மக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர். திரும்பும் பக்கம் எல்லாம் விண்ணை முட்டும் அளவுக்கு விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்கான பொருட்களை அடித்தட்டு மக்கள் வாங்க முடியாத சூழல் நிலவி வருகிறது. அண்மையில் பொங்கி எழுந்த அந்நாட்டு மக்கள் அதிபர் கோட்டபய ராஜபக்சே பதவி விலக வேண்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போராட்டம் கலவரமாக மாறியது.
இதையடுத்து அதிபர் குடும்பம் இலங்கையை விட்டு தப்பி சென்ற நிலையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுள்ளார்.
புதிய அதிபர் வந்த பிறகாவது விலைவாசி உயர்வு சற்று குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விலை வாசி கட்டுப்பாட்டிற்குள் இன்னும் வரவில்லை.
விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு
அதற்கு உதரணமாக ஒரு கிலோ ஆரஞ்ச் பழம் ரூ.3000 ஆயிரம் ரூபாய்க்கும், ஒரு கிலோ திராட்சை பழத்தின் விலை ரூ. 5000 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இணையத்தில் உணவக பில் ஒன்று வேகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் ஆடு இறைச்சி வகை உணவுக்கு ரூ.11 ஆயிரம் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் உணவு பிரியர்களை கலங்கடித்துள்ளது.
கொழும்புவில் ஒரு கிலோ ஆடு இறைச்சி ரூ.3000 ஆயிரத்திற்கு விற்கப்பட்டு வரும் நிலையில், உணவகத்தில் ஆடு இறைச்சியின் விலை தலையை சுற்ற வைக்கிறது.

கொழும்பு தலைநகர் C.W.W.கன்னங்கரா பிரதேசத்தில் உள்ள பிரபல உணவகம் ஒன்று 7 வகையான உணவுகளுக்கு 32,385 ரூபாய் பில் வழங்கியுள்ளது.
தற்போது இந்த பில் தான் இணையத்தின் இன்றைய நாளின் பேசு பொருளாக மாறியிருக்கிறது.