நள்ளிரவில் 50 ஆடுகளை வெட்டி 3 ஆயிரம் ஆண்களுக்கு மட்டும் விருந்து - என்ன காரணம்?

Festival Dindigul
By Sumathi Mar 19, 2024 04:04 AM GMT
Report

திருவிழாவில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது.

வினோத திருவிழா

தமிழகத்தில் ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் வினோத திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. திண்டுக்கல், அருகே உலுப்பக்குடியில் வேட்டைக்காரன் கோயில் உள்ளது. இங்கு பல நூறு ஆண்டுகளாக நடைமுறை ஒன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

dindigul festival

அதன்படி, ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. நள்ளிரவு ஒரு மணிக்கு பொங்கல் வைத்து வழிபாட்டை துவங்கி, நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 50 ஆடுகள் பலியிடப்பட்டது.

ஆண்கள் அனுமதி இல்லை; பெண்கள் மட்டும் வாழும் அதிசய கிராமம்! காரணம் என்ன தெரியுமா?

ஆண்கள் அனுமதி இல்லை; பெண்கள் மட்டும் வாழும் அதிசய கிராமம்! காரணம் என்ன தெரியுமா?

ஆண்கள் மட்டும்..

அதன்பின், சுமார் 100 மூட்டை அரிசியில் சாதம் தயாரிக்கப்பட்டது. இந்த கறிவிருந்து அங்கு கூடியிருந்த சுமார் 3,000 மேற்பட்ட ஆண்களுக்கு வழங்கப்பட்டது.

நள்ளிரவில் 50 ஆடுகளை வெட்டி 3 ஆயிரம் ஆண்களுக்கு மட்டும் விருந்து - என்ன காரணம்? | Mutton Feast For Only Men In Dindigul Festival

இதில், நத்தம், உண்ணாம்பட்டி, காட்டுவேலம்பட்டி, முளையூர், வேலாயுதம்பட்டி, குட்டூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆண்கள் கலந்து கொண்டனர். இதனை வெளியூர்களில் இருந்தெல்லாம் ஏராளமானோர் வந்து பார்வையிட்டனர்.

குறிப்பாக இந்த விழாவில் பிறந்த குழந்தை முதல் வயதான மூதாட்டி வரையில் பெண்கள் இந்த திருவிழாவில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.