துர்கா பூஜை - சிறைக் கைதிகளுக்கு மட்டன் பிரியாணி, சிக்கன் கிரேவி
துர்கா பூஜையை முன்னிட்டு சிறைக் கைதிகளுக்கு சிறப்பு உணவு வழங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
துர்கா பூஜை
மேற்கு வங்க மாநிலத்தில் துர்கா பூஜை கொண்டாட்டம் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். இந்நிலையில், சிறைக் கைதிகளுக்கு சிறப்பு உணவுகள் வழங்கவுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இதுகுறித்து மேற்கு வங்க சீர்திருத்த இல்லங்களுக்கான அதிகாரி கூறுகையில், சிறைக் கைதிகளுக்கான இந்த சிறப்பு மெனு துர்கான பூஜையின் ஆரம்ப நாளான அக்டோபர் 9 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை அமலில் இருக்கும்.
சிறையில் உள்ள விசாரணைக் கைதிகள் மற்றும் தண்டனை பெற்ற கைதிகள் அனைவருக்கும் மதிய மற்றும் இரவு உணவுகள் மாற்றியமைக்கப்படும். சிறப்பு உணவாக சிறைக் கைதிகளுக்கு மட்டன் பிரியாணி, மீன் இறைச்சியுடன் மலபார் கீரை, மீன் இறைச்சியுடன் கூடிய பருப்புக் கடையல்,
சிறப்பு விருந்து
பூரி மற்றும் கொண்டைக்கடலை, சிக்கன் குழம்பு, பெங்காலி இனிப்பு வகைகள், பாஸ்மதி அரிசியில் செய்த புலாவ் வகைகள், உருளைக்கிழங்குடன் கூடிய இறால் உள்ளிட்டவை ஒவ்வொரு நாளும் வழங்கப்படும்.
அசைவம், சைவம் என சிறைக் கைதிகளின் விருப்பதிற்கேற்ப தனித்தனியாக உணவுகள் சமைக்கப்பட்டு அவர்களுக்கு விருப்பத்துக்கு ஏற்ப வழங்க உள்ளோம். மேற்குவங்கத்தினரைப் பொறுத்தவரை துர்கா பூஜை உள்ளிட்ட பண்டிகைகள் மீன் மற்றும் இறைச்சி இல்லாமல் நிறைவடையாது.
எனவே, சிறைக் கைதிகள் அனைவரும் சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருக்கும் வகையில் அவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளில் நாங்கள் இந்த மாற்றத்தை செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.