குவைத்தில் கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடல் இன்று தமிழகம் வருகிறது
குவைத்தில் சுட்டு கொல்லப்பட்ட முத்துக்குமரன் உடல் இன்று தமிழகம் வருகின்றது.
முத்துக்குமரன் மரணம்
திருவாரூர் மாவட்டம்கூத்தாநல்லூர் தாலுகாவை சேர்ந்த லட்சுமாங்குடியை சேர்ந்தவர் முத்துக்குமரன். வெளிநாட்டு வேலைக்கு அங்குள்ள ஏஜென்ட் மூலம் சென்றுள்ளார். அங்கு கிளீனிங் வேலை என்று அழைத்து செல்லப்பட்ட அவர், வனாந்திரத்தில் ஒட்டகம் மேய்க்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
தமிழகம் வரும் உடல்
இதுகுறித்து அவர் தனது குடும்பத்தினரிடம் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் குவைத் நாட்டில் சுட்டு கொல்லப்பட்டதாக அங்குள்ள ஏஜென்ட் மூலம் தகவல் முத்துக்குமரன் குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, உடலையாவது சொந்த ஊருக்கு விரைவில் அனுப்பி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்த நிலையில், இன்று அவரது உடல் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட உளளது.