முதுகுளத்துார் மணிகண்டன் மரணத்தை மத்தியக் குற்றப்புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் - சீமான்
முதுகுளத்துார் மாணவர் மணிகண்டன் மரணத்தை மத்தியக் குற்றப்புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் முதுகுளத்துார் பகுதியைச் சேர்ந்த கல்லுாரி மாணவர் தம்பி மணிகண்டன் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில்,தற்போது நஞ்சுண்டு உயிரிழந்தார்.
எனக்காவல்துறை அறிவித்திருப்பது பல்வேறு ஐயங்களையும் கேள்விகளையும் எழுப்புகிறது. முதலில் பாம்பு கடித்து இறந்து விட்டதாகவும்,
பின்னர்,தொண்டையில் உணவு சிக்கி இறந்ததாகவும் காவல்துறையினர் கூறி வந்த நிலையில் தற்போது நஞ்சுண்டு தற்கொலை செய்து கொண்டதாகக் கூறியிருப்பது முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது.
தற்கொலை செய்து கொண்டார் என்பது உண்மையென்றால்,அதனைக்கூற இவ்வளவு நாட்கள் எதற்கு? எதற்கு இவ்வளவு நீண்டகால அளவு? கதை புனைந்து கட்டமைக்கவா?இதுவெல்லாம் தான் பெரும் ஐயத்திற்கு வலு சேர்கிறது என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.