எதனால் இந்த விபரீத முடிவு...தனக்கு தானே தாலிகட்டி கொண்ட விஜய் டிவி நடிகை..!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடரில் நாயகியாக நடித்து வரும் ஷோபனா தனக்கு தானே தாலிகட்டி கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
முத்தழகு ஷோபனா
டிக்டாக் செயலி மூலம் பிரபலமானவர் ஷோபனா. இந்த செயலியின் மூலம் கிடைத்த புகழை ஷோபனா சரியாக பயனப்டுத்தி கொள்ள அவருக்கு சின்னத்திரையில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. அவ்வாறு ஷோபனா நடிக்க துவங்கிய தொடர் தான் முத்தழகு.
தினமும் மதியம் 3:30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த தொடரில் முத்தழகாக நடித்து நல்ல பிரபலம் பெற்றுள்ளார் ஷோபனா. விஜய் டிவியில் நடிக்கும் நட்சத்திரங்கள் பெரும்பாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல புகழை அடையும் நிலையில், அவர்களது சமூகவலைதளபக்கத்தையும் பலர் பின்தொடர்ந்து வருகின்றார். அவ்வாறு, தற்போது ஷோபனாவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடருபவர்கள் அவருடைய வீடியோ ஒன்றை பார்த்து ஆச்சரியத்தில் ஆழ்த்துள்ளனர்.
தனக்கு தானே தாலிகட்டிய ஷோபனா
அந்த வீடியோவில், தனக்கு தானே தாலிகட்டி கொள்கிறார் நடிகை ஷோபனா. இந்த கண்ட பலரும் அதிர்ச்சியடைய இது பின்னர் ஷூட்டிங்கிற்காக எடுத்த வீடியோ என்பது தெரியவந்துள்ளது.
முத்தழகு தொடரில், திருமண காட்சி படமாக்கப்படும் நிலையில், நடிகை ஷோபனா தனக்கு தானே தாலிகட்டி கொண்டுள்ளார். இந்த வீடியோ தான் தற்போது சமூகவலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.

விடுதலைப்புலிகள் தலைவர் மரணத்தில் தொடரும் மர்ம புதிர்: மீண்டும் குறிவைக்கப்படும் ஈழத்தமிழர்கள் IBC Tamil
