இல்லம் தேடி கல்வி திட்டம் மதிப்பு மிக்கதாகும் : கம்யூ. கட்சிமாநிலச் செயலாளர் முத்தரசன்
இல்லம் தேடி கல்வி திட்டத்தை விளக்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்துள்ள விளக்கத்துக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் :
இல்லம் தேடி கல்வி திட்டத்தை விளக்கி முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை மதிப்பு மிக்கதாகும். இதன் மூலம் ஒன்றிய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப் போவதில்லை என்று முதல்வர் உறுதிப்படுத்தி உள்ளார்.
மேலும், மாநில கல்விக் கொள்கையை வகுக்க கல்வியாளர்கள் குழு அமைக்கப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், மாற்றுக் கருத்துக்களை பரிசீலித்து விழிப்புடன் இருப்பதாக விளக்கம் தரும் பொறுப்புணர்வு மெச்சத்தக்கது. அரசின் உன்னத நோக்கங்களுக்கு ஏற்ப இல்லம் தேடி கல்வித் திட்டத்தை செயல்படுத்த கம்யூனிஸ்ட் கட்சி ஒத்துழைக்கும் என்று உறுதி அளித்துள்ளார்.
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு, இல்லம் தேடி கல்வித் திட்டம் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மேற்கொள்வார்கள் எனில் இங்கே ஷாகாக்கள் நடத்தும் சங்பரிவார் கும்பல் ஊடுருவி பிஞ்சு மனங்களில் மதவெறி நஞ்சு விதைக்கும் விபரீதம் ஏற்படும் என்பதை தமிழ் நாடு அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில செயலாளர் இரா.முத்தரசன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.