‘‘முஸ்தபா முஸ்தபா டோண்ட் வர்ரி முஸ்தபா ’’ - சிஎஸ்கே வெளியிட்ட வீடியோ: கொண்டாடி தீர்க்கும் ரசிகர்கள்
ஐபிஎல் மெகா வீரர்கள் ஏலம் பெங்களூருவில் நேற்று தொடங்கி தொடர்ந்து 2-வது நாளாக நடைபெற்று வருகிறது.
நேற்றைய ஏலத்தில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கும், தீபக் சாஹர் 14 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து இரண்டாவது நாள் ஏலம் இன்று மதியம் 12 மணிக்கு தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று ஏலத்தில் பிராவோ மற்றும் அம்பாத்தி ராயுடுவை மீண்டும் அணியில் எடுத்தது.
இதை கொண்டாடும் வகையில் தற்போது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ‘முஸ்தஃபா, முஸ்தஃபா’ பாடலை போட்டு பிராவோ மற்றும் ராயுடு ஒன்றாக உள்ள தருணங்களை பகிர்ந்துள்ளது.
Mustafa Mustafa ? vibes back at the Den! ?#SuperAuction #WhistlePodu ? @RayuduAmbati @DJBravo47 pic.twitter.com/bcPMJrKKnl
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) February 13, 2022
இந்த வீடியோவை சிஎஸ்கே ரசிகர்கள் பலரும் பார்த்து வேகமாக வைரலாக்கி வருகின்றனர்.