சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் - ஆளுநர் ஆர்.என்.ரவி
சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் பேசியுள்ளார்.
ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை
குடிமைப்பணி நேர்முக தேர்தலில் கலந்து கொள்ள உள்ள 80 பேருடன் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துரையாடினார்.
அப்போது நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள உள்ளவர்களுக்கு பல அறிவுரைகளை வழங்கினார். இதுகுறித்து அவர் பேசுகையில்,
குடிமைப்பணி நேர்முகத்தேர்வை எழுத உள்ள நீங்கள், கேள்விகளுக்கு அவசரமாக பதில் அளிக்க வேண்டாம், நிதானமாக பதில் அளியுங்கள் என்றார்.
குடிமைப் பணிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு பர்சனாலிட்டி மிக முக்கியம் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தினார்.
மேலும் அவர், சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டும் என கூறினார்.