ஜிஹாதிகள் காதல் என்ற பெயரில் பெண்களை தவறாக பயன்படுத்துகின்றனர் : கேரள பாதிரியார் சர்ச்சை பேச்சு

Kerala Bishop Mar Joseph Kallarangatt love jihad
By Irumporai Sep 09, 2021 01:39 PM GMT
Report

கேரளாவில் முஸ்லிமல்லாத சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் லவ் ஜிகாத் மட்டும் அல்ல போதைப் பொருள் ஜிஹாத மூலமும் குறிவைக்கபடுவதாக பேசிய பாதிரியார் ஜோசப் கல்லரங்கட் பேச்சு சர்ச்சையாகியுள்ளது

பாதிரியார் ஜோசப் கல்லரங்கட் ஒரு நிகழ்சியில் கலந்து கொண்டு பேசுகையில் இந்தியாவில் ஆயுதங்களை கொண்டு மற்றவர்களை அழிப்பது எளிதல்ல என்பதால், அவர்கள் லவ் ஜிஹாத், நார்காடிக் ஜிஹாத் வழிகளைப் பயன்படுத்துகின்றனர்.

மேலும் அவர்களின் நோக்கம் மதத்தை ஊக்குவிப்பது, முஸ்லிம் அல்லாதவர்களை முடிவுக்குக் கொண்டுவருவதே அவர்களின் நோக்கம். ஜிஹாதிகள், காதல் என்கிற பெயரில் பிற மதங்களைச் சேர்ந்த பெண்களை தவறான நடவடிக்கைகளுக்கும் பொருளாதார ஆதாயங்களுக்கும் பயன்படுத்துகின்றனர் எனக் கூறியுள்ளார்.

பாதிரியார் ஜோசப் கல்லரங்கட் பேச்சு கேரளாவில் பெரும் சர்ச்சையினை ஏற்படுத்தியுள்ளது.