முஸ்லிம் பெண்களுக்கு பாலியல் மிரட்டல் விடுத்து சிக்கலில் சிக்கிய சாமியார் - வைரலாகும் வீடியோ
தற்போது, சமூகவலைத்தளத்தில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், உத்தர பிரதேச மாநிலம், சீதாபூர் மாவட்டத்தில், கைராபாத் என்ற இடத்தில் மசூதி ஒன்று உள்ளது. அந்த மசூதிக்கு வெளியே நிறைய பொதுமக்கள் சூழ்ந்திருந்தனர்.
அப்போது, சாமியார் ஒருவர் ஜீப்பில் அமர்ந்தபடி பேசுகிறார். அவர் பேசுகையில், "ஒரு முஸ்லிம் இந்தப் பகுதியில் உள்ள பெண்களை துன்புறுத்தினால், இங்குள்ள முஸ்லிம் பெண்களைக் கடத்தி, பகிரங்கமாக பாலியல் பலாத்காரம் செய்வேன்" என்று கூறி மிரட்டுகிறார். சாமியார் பேசியவுடன், அங்கிருந்தவர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்கிறார்கள்.
சாமியார் பேசும்போது, ஜீப் அருகில் அம்மாநில போலீசாரும் உடன் உள்ளனர். தற்போது, இந்த வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பவம் குறித்து, சீதாபூர் போலீஸ் மூத்த அதிகாரி கூறுகையில், இந்த விவகாரம் குறித்து விசாரித்து வருவதாகவும், உண்மைகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
சாமியாரின் இந்தச் செயலுக்கு ஐ.நா மனித உரிமைகள் அமைப்பு மற்றும் தேசிய மகளிர் ஆணையத்திடம் முறையிட கோரிக்கை வைக்கப்பட்டிருக்கிறது.
Here is the full video. It's been more than 5 days. No action against him by Police yet. pic.twitter.com/EP3kkOY6s5
— Mohammed Zubair (@zoo_bear) April 7, 2022