முஸ்லிம் மாணவர்கள் பயங்கரவாதிகள் - சர்ச்சையாக பேசிய பேராசிரியர் பணியிடை நீக்கம்

Viral Video Karnataka
By Thahir Nov 28, 2022 01:26 PM GMT
Report

வகுப்பறையில் முஸ்லிம் மாணவர்கள் பயங்கரவாதி என கூறிய போராசிரியரிடம் சக முஸ்லிம் மாணவர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பேராசிரியர் சர்ச்சை பேச்சு 

கர்நாடகா மாநிலம் மணிப்பாலில் உள்ள மணிபால் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் கல்லுாரி ஒன்று செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வகுப்பறையில் பாடம் நடத்திய போராசிரியர் ஒருவர் முஸ்லிம் மாணவர்கள் பயங்கரவாதிகள் என கூறியுள்ளார்.

வகுப்பில் இருந்த முஸ்லிம் மாணவர் ஒருவர் இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த நிலையில் நீங்கள் எப்படி பயங்கரவாதிகள் என அழைப்பீர்கள்.

நீங்கள் கல்வியை கற்றுக்கொடுக்க கூடிய பேராசிரியர் இப்படி எல்லா மாணவர்களுக்கும் மத்தியில் இப்படி பயங்கரவாதிகள் என ஏன் அழைத்தீர்கள் என பேராசிரியருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

muslim-students-are-terrorists-professor-talk

மாணவனின் நியாயமான கோரிக்கையை உணர்ந்த அந்த பேராசிரியர் தான் வேடிக்கையாக தான் அழைத்தேன் என கூறி மழுப்பினார்.

பணியிடை நீக்கம் செய்த நிர்வாகம் 

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலான நிலையில் தற்போது பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்ப்பட்டுள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.

இந்த நிலையில் கல்வி கற்றுக்கொடுக்க கூடிய ஆசிரியரே முஸ்லிம் மாணவர்களை பயங்கரவாதிகள் என குறிப்பிட்டு பேசிய சம்பவம் மீண்டும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.