முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து இந்தியா என்ன செய்யப்போகிறது? - மோடி கொடுத்த ரியாக்ஷன்
முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து இந்தியா என்ன செய்யப்போகிறது என்ற கேள்விக்கு பிரதமர் மோடி பதில் அளித்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முஸ்லிம்களின் உரிமைகள் குறித்த கேள்வி
அமெரிக்கா சென்றுள்ள இந்தியா பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். இதை தொடர்ந்து அமெரிக்கா நாடாளுமன்றத்தில் உரையாற்றினார்.

பின்னர் அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடியிடம் அமெரிக்கா செய்தியாளர் ஒருவர் இந்தியாவில் முஸ்லிம்களின் உரிமைகள் குறித்து இந்தியா என்ன செய்யப்போகிறது என கேள்வி எழுப்பினார்.
ரத்தத்தில் ஜனநாயகம் கலந்திருக்கிறது
அதற்கு பிரதமர் மோடி பதில் அளித்து பேசுகையில், நீங்கள் கேட்பது ஆச்சரியமாக உள்ளது. எங்கள் உணர்விலும், ரத்தத்திலும் ஜனநாயகம் கலந்திருக்கிறது.

எங்கள் சுவாசத்திலும் ஜனநாயகம் கலந்திருக்கிறது. எங்கள் அரசியலமைப்பு சட்டத்தில் ஜனநாயகமே உள்ளது. ஜனநாயகத்திற்காக நாங்கள் வாழும் போது பாகுபாடு என்ற பேச்சுக்கே இடமில்லை.
மனித உரிமைகளும், மனிதத்திற்கான மதிப்பும் இல்லையென்றால் ஜனநாயகம் அங்கு இருக்க முடியாது.
அனைத்து சிறுபான்மையினருக்கும் இந்தியாவில் உள்ள அனைத்து வளங்களும், வசதிகளும் சாதி மத பேதமின்றி எளிதாக கிடைக்கிறது என்று தெரிவித்தார்.