பாளையங்கோட்டையில் முஸ்லீம் இளைஞர் வெட்டி படுகொலை - பதற்றம் அதிகரிப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த காதர் கான் பாளையங்கோட்டையில் உள்ள தந்தை மக்தும் வீட்டில் இருக்கும் போது கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் சாத்தான்குளத்தில் நடந்த ஒரு சாராய வியாபாரி கொலையில் காதர் கான் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
சாத்தான்குளம் சாராய வியாபாரிகள் மற்றும் கஞ்சா வியாபாரிகள் ஆகியோர் தொடர்ந்து காதர் கான் மீது கடுங்கோபம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் முன்விரோதம் காரணமாக காதர் கானை மர்ம நபர்கள் வீடு புகுந்து வெட்டி படுகொலை செய்தனர்.
அண்மையில் வாணியம்பாடியில் வசீம் அக்ரம் கஞ்சா கும்பலை காட்டி கொடுத்ததால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்து சில தினங்களே ஆன நிலையில் மீண்டும் மற்றொரு முஸ்லீம் இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் தொடர்ந்து கஞ்சா,சாராயம் போன்ற போதை பொருட்கள் விற்பனையை காவல்துறையினர் கண்டு பிடித்து வேறோடு அழிக்க வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.