மதம் என பிரிந்தது போதும்..கிருஷ்ணர் வேடமிட்ட முஸ்லிம் தம்பதி மகன் - வைரலாகும் வீடியோ!
முஸ்லிம் தம்பதியின் மகன் கிருஷ்ணர் வேடமிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கிருஷ்ணர் வேடம்
நாடு முழுவதும் கிருஷ்ணர் ஜெயந்தி கடந்த திங்கட்கிழமை கொண்டாடப்பட்டது. அன்று பெற்றோர்கள் தங்களுடைய குழந்தைகளை கிருஷ்ணர், ராதைபோல அலங்காரம் செய்து மகிழ்வது வழக்கம்.
அந்த வகையில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில், முஸ்லிம் தம்பதி தங்களுடையமகனை கிருஷ்ணர்போல வேடமிட வைத்து,
முஸ்லிம் தம்பதி
இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ఒక ముస్లిం కుటుంబం జన్మాష్టమికి తమ పిల్లవాడికి కృష్ణుడి వేషం వేసింది ?? pic.twitter.com/FGecVXiLL6
— Syed Mahaboob Basha (@Smahaboob17) August 27, 2024
8 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ள இந்த வீடியோ, 'மதத்தை கடந்த மனம்', 'இந்தியாவின் கலாசார ஒற்றுமை' போன்ற கருத்துகளை நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர்.