11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - கனமழையில் ஆசிரியர் செய்த கொடூரம் சம்பவம்!
11 வயது சிறுமிக்கு இசை ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை
தமிழகத்தில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் பல்வேறு பகுதிகளில் சாலை மற்றும் மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்தது.அந்த வகையில் சென்னை சாலிகிராமம் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பில் மழைநீர் புகுந்ததால்,
தரை தளத்தில் வசிக்கும் குடும்பத்தினர் மாடியில் காலியாக இருக்கும் அறைக்குச் சென்றுள்ளனர்.அந்த அறையை அவர்கள் சுத்தம் செய்து கொண்டிருந்தபோது, அடுக்குமாடிக் குடியிருப்பில் அருகில் வசிக்கும் இசை ஆசிரியரான சுரேந்தர் என்பவர்,அந்த வீட்டிலிருந்த 11 வயது சிறுமியைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பாலியல் தொல்லை
அடுத்த சில நிமிடங்களில் சிறுமி அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளார். இதனைக் கண்ட பெற்றோர் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். அப்போது இசை ஆசிரியர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாக அழுதுகொண்டே கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர், இசை ஆசிரியர் சுரேந்தர் மீது போலீசில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் சுரேந்தரை போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்து சிறையில் அடைத்தனர்.