பிரபல இசையமைப்பாளர் மாரடைப்பால் மரணம் - ரசிகர்கள் அதிர்ச்சி!
கேரள திரையுலகின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான பாரீஸ் சந்திரன் மாரடைப்பால் காலமானார்.
66 வயதான கேரள திரையுலகின் பிரபல இசையமைப்பாளர் பாரீஸ் சந்திரன் மரணமடைந்தார். மாரடைப்பு காரணமாக கோழிக்கோடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
1956-ல் எளிமையான இசைக் கலைஞர்களின் குடும்பத்தில் பிறந்த இவர் இளம் வயதிலேயே இசை பயின்று மலையாள நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தார்.
பிறகு திரைப்படத்துறையில் நுழைந்து தனது திறமையால் பிரபல இசையமைப்பாளராக உருவெடுத்தார். ‘நான் ஸ்டீவ் லோபஸ்’, ‘திருஷ்டானம்’, ‘சாயில்யம்’, ‘பம்பாய் மிட்டாய்’, ‘நகரம்’, ‘பயாஸ்கோப்’, ‘ஈடா’ உள்ளிட்ட பல படங்களுக்குப் பாடல்கள் இயற்றியுள்ளார்.
2008ஆம் ஆண்டில், ‘பயாஸ்கோப்’ படத்திற்காக பாரிஸ் சந்திரன் சிறந்த பின்னணி இசைக்கான கேரள மாநில விருதைப் பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, 2010 -ல், ‘பிரணயத்தில் ஒருவாள்’ என்ற டெலிஃபிலிம் மூலம் கேரள அரசின் தொலைக்காட்சி விருதைப் பெற்றார்.