80 கோடி கொடுத்தால் ஆஸ்கார் ? - நாட்டு நாட்டு பாடலை வச்சு செய்த ஜேம்ஸ் வசந்தன்
ஆஸ்கர் விருதினை வென்ற ஆர் ஆர் பாடலுக்கு பலவேறு தரப்பினரும் அரசியல் தலைவர்களும் சினிமா விமர்சகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர், அதே சமயம் இந்த விருது குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கடும் விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது முக நூல் பக்கத்தில் :
நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் வென்றவுடன் பாராட்டுகள் ஒருபுறம் வந்துகொண்டிருந்தாலும், மறுபுறத்தில், ஆஸ்கர் விருது என்பதே பம்மாத்து; கோடிக்கணக்கில் லாபி செய்துதான் இதில் விருதுகளைப் பெறமுடியும்.
80 கோடி இருந்தால் ஆஸ்கார்
இவர்களும் 80 கோடிக்கு மேல் செலவு செய்துதான் இதை வாங்கியிருக்கிறார்கள் என்கிற விமர்சனங்களும் கூடவே வருவதையும் காணமுடிகிறது. ஆஸ்கர் விருதின் மீது வைக்கப்படுகிற இந்தக் குற்றச்சாட்டுகளில் ஓரளவுக்கு அடிப்படை உண்மைகள் இருந்தாலும், எல்லா சமயங்களிலும் எல்லா வெற்றிகளும் இப்படிப் பெறப்பட்டவைதான் என்று சொல்லமுடியுமா? அதற்கு சாத்தியம் உண்டா?
எல்லாவற்றுக்கும் விலை
அப்படிப் பார்த்தால் எந்த விருதில், எந்த அங்கீகாரத்தில் அரசியல், லாபி, பணவிளையாட்டு இல்லை? விருதுகளுக்கு ஏன் போகவேண்டும்? மற்ற இடங்களில் இது இல்லையா? வேலைவாய்ப்பு, பதவி, பணி பேரம், நீதிமன்றத் தீர்ப்புகள் என்று எல்லாவற்றுக்கும் இன்று ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டு விட்டதே! எங்கோ ஒரு சிறு விஷயத்தில் நாம் பாரபட்சமாகவோ, சுயநலத்துடனோ, வேண்டியவர் வேண்டாதவர், என் இனம், என் மக்கள் என்றோ பல்வேறு சூழல்களில் நாம் தவறியதே இல்லையா?எல்லாமே அறப் பிறழ்வுதானே?
அதனால் இந்த வெட்டி வியாக்கியானங்களை விட்டுவிட்டு உலகின் மிய உயரிய விருதை நம் நாட்டுப் பாடல் பெற்றிருக்கிற தருணத்தில் அவர்களை வாழ்த்த மனமில்லாவிட்டாலும் பழிசொல்லாதிருப்பது பண்பாயிருக்கும் என கடுமையாக விமர்சித்துள்ளார்.