மனைவியை விவாகரத்து செய்தார் இமான் - ரசிகர்கள் அதிர்ச்சி

wife divorce music director iman
By Nandhini Dec 29, 2021 07:58 AM GMT
Report

இசையமைப்பாளர் டி. இமான் தனது மனைவியை விவாகரத்து செய்துள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் இமான் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “எனது நலம் விரும்பிகள், தீவிரமான இசை ரசிகர்கள் என்னுடன் எப்போதும் நின்றிருக்கிறீர்கள். அதற்கு நான் என்றுமே நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வாழ்க்கை வெவ்வேறு பாதைகளை கொண்டது. மோனிகா ரிச்சார்டும் நானும் பரஸ்பரம் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதத்தோடு எங்களின் திருமண உறவை முடித்து கொண்டு விட்டோம். நாங்கள் கணவன் மனைவி இல்லை. ஆதலால் நலம் விரும்பிகள், இசை ரசிகர்கள், ஊடகம் ஆகியோர் எங்களுக்கான பிரைவசியை தந்து நாங்கள் இதனை கடந்து தொடர்ந்து பயணிக்க உதவ வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரபல இசையமைப்பாளரான டி.இமான் கடந்த 2008ம் ஆண்டு மோனிகா ரிச்சர்ட் என்பவரை திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இமான் இப்படியான ஒரு அறிவிப்பை வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

மனைவியை விவாகரத்து செய்தார் இமான் - ரசிகர்கள் அதிர்ச்சி | Music Director Iman Divorce Wife