மின்னலில் தோன்றிய 'மெலடி கிங்' : ஹாரிஸ் ஜெயராஜின் பிறந்தநாள் இன்று!

birthday musicdirector harrisjayaraj
By Irumporai Jan 08, 2022 06:23 AM GMT
Report

தமிழ் சினிமாவில் லட்சத்தில் ஒருவானாக காலடி எடுத்து வைத்து இன்று தமிழ் சினிமாவின் மெலடி கிங்காக திகழும் ஹரிஸ்ஜெயராஜின் பிறந்த நாள் இன்று.

 12 வயசுல ஒரு பிஞ்சு தென்றல் தன்னோட இசை பயணத்த தொடங்கினப்போ யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க. இவர் ஒரு பெரும் தமிழ் திரை இசை ரசிகர்களை தன்னோட விசிறிகளா மாத்த போறாருன்னு. ஆனா 5 ஜூலை 2001 அன்று இவரோட முதல் திரைப்பட இசை வெளியானது.

ஆனா அதுக்கு முன்னாடியே இவரோட இரண்டாவது படத்தோட இசை 12 ஜனவரி 2001 வெளியாகி ஒரு பெரும் ஈர்ப்ப தமிழ் சினிமா ரசிகர்களிடம் கொடுத்து இருந்துது. ஆமாங்க, இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் முதல்ல மஜ்னு திரைப்படத்துக்கு தான் இசையமைச்சாரு. ஆனா, அதுக்கு முன்னாடியே மின்னலே படம் வெளியாயிடுச்சு.

எது எப்படியோ, 2001 ஆம் ஆண்டில இருந்து இப்போ வரைக்கும் இவரோட இசை நம்மள மயக்கி வைச்சிருக்கு, ஆட வைச்சிருக்கு, அழ வைச்சிருக்கு, உருக வைச்சிருக்கு. வாலி, வைரமுத்து, தாமரை, நா. முத்துக்குமார், பா.விஜய், யுகபாரதி, மதன் கார்க்கின்னு தமிழ்ல பாடலாசிரியர்களோட இணைந்து இவர் கொடுத்த பாடல்கள் எல்லாமே இளைஞர்களுக்கு பிடிச்ச மாதிரியும், உண்மையான வரிகளுக்கு இயல்பான இசையாவும் ஈர்ப்பவை இப்படி நம்ம மனச கட்டி போட்டு வச்சுருக்குற ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களோட ஆரம்பக்காலத்துல வெளிவந்த சிறந்த  பாடல்கள் இங்கே:

மின்னலே : மின்னலே படத்தின் தீம் இசை இன்றும் பலரது செல்போன்களில் ரிங்டோனாக ஒலித்துக்கொண்டிருக்கிறது என்பதுதான் ஹாரிஸின் மேஜிக்

[

அந்த படத்தில் இடம் பெற்ற அடை மழை வரும் அதில் நனைவோமேகுளிர் காய்ச்சலோடு சிநேகம்ஒரு போர்வைக்குள் இரு தூக்கம் என்ற வரிகளுக்கு உயிர் கொடுத்திருப்பார் ஹரிஸ்.

மஜ்னு : முதல் படத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்த ஹாரிஸின் இரண்டாவது படம் மீது பலருக்கும் எதிர்பார்ப்பு எகிறியது.

[

மஜ்னு திரைப்படம் மூலம் அனைவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்தார் அவர். மஜ்னு படத்தின் 'முதற்கனவே பாடல்' இன்றும் பலரது பேவரைட் ரகம்.

அதன்பின் ஹாரிஸ் ஜெயராஜ் தமிழ் சினிமாவின் சிறந்த இசையமைப்பாளர் ஆகி போனார்.

12பி:

காதலில் மெலடி என்றால் அது ஹரிஸ் தான் என்பதற்கு சாட்சியாக அமைந்தது 12 பி

இந்த படத்தில் இடம் பெற்ற


சூரியன் வாசல் வந்து ஐஸ்க்ரீம் கொடுக்கும் உடாதம்மாபீலாதம்மா

சந்திரன் உள்ளே வந்து சாக்லெட் கொடுக்கும்

இந்த பாடல் அன்றைய இளைஞர்களின் காதல் கீதம்தான்

சாமுராய்:

சாமுராயின் 'மூங்கில் காடுகளே' பாடலை கண் மூடி கேட்டால் நாம் எங்கேயோ மலைக்காடுகளில் பயணிப்பது போலவே இருக்கும்.

[

அந்த ரியாலிட்டி நிலையை இசையால் மனதுக்கு கொடுத்தவர் ஹாரிஸ்

லேசா லேசா:

சொல்லாத காதல் சொல்ல முடியாத காதல் இது போன்ற எல்லா காதல்களின் சுகமான சுமைகளாக அமைந்தது லேசா லேசா .

[

ஏன் இன்று கூட ஏதோ ஒன்று ஏதோ ஒன்று' பாடல் இன்றும் பலரது செல்போன் பிளேலிஸ்டில் முக்கிய இடத்தில் இருக்கும்.

 அரசியல் மட்டும் அல்ல இசையிலும் சிலரது கூட்டணி வெற்றி வாகை சூடும் அந்த வகையில் தாமரையின் வரிகள். கவுதம் - ஹாரிஸ் - தாமரை என்றாலே அது ஹிட் என்ற நிலையை உருவாக்கி வைத்திருந்தார்கள்.

வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் 'கற்க கற்க' பாடல் ஒரு மாஸ் என்றால் 'பார்த்த முதல் நாளே' பாடல் ஒரு அழகான மெலடி லெவல். இப்படி ஒவ்வொரு படத்திலும் பல்வேறு இசைக்கோர்ப்புகள் மூலம் ரசிக்க வைத்தார் ஹாரிஸ்.

பல இடங்களில் அவரது பின்னணி இசை காட்சிகளுக்கு அவ்வளவு மெருகூட்டும் என்னை அறிந்தால் படத்தில் அஜித் துப்பாக்கியை கையில் எடுத்துக்கொண்டு அருண் விஜயை நோக்கி செல்லும் காட்சியில் வரும் பிஜிஎம் பார்ப்பவர்களை புல்லரிக்கச் செய்யும்.

ஹாரிஸிடம் இயக்குநர் ஷங்கர் இணைந்த அந்நியன், நண்பன் ஆகிய படங்களும் ஷங்கரின் பிரம்மாண்டத்திற்கு இணையாகவே இருந்தன.

கஜினி படத்துல சுற்றுவிழி சுடரே, அயன் படத்துல விழி மூடி யோசித்தால், ஆதவன் படத்துல வாராயோ வாராயோ, எங்கேயும் எப்போதும் படத்துல எங்கேயும் காதல், இரண்டாம் உலகம் படத்துல என் காதல் தீ , ஏழாம் அறிவு படத்துல முன் அந்தி சாரலேன்னு காதல் மெல்லிசை கொடுத்தவர்

மின்னலில் தோன்றிய

காதல் யானை வருகிற ரெமோன்னு விக்ரமுக்கும், டங்காமாரி உதாரின்னு தனுஷ்க்கும் வெஸ்டர்ன் பாட்டு, குத்துப்பாட்டுன்னும் கலக்கி இருப்பாரு .

இப்படி நம்ம வாழ்க்கையோட காதல், சோகம், சந்தோஷம் போன்ற தருணங்களில் ஒன்றாகவே இருக்கிறார் ஹரிஸ்

,ஆமாம் முடிந்தால் உங்க ஏரியால இருக்குற பேச்சுலர் அப்பார்ட் மெண்ட்டிலிருந்து வரும் பாடல்களை கேட்டு பாருங்க அதுல கண்டிப்பாக ஹரிஸ் ம் இருப்பார்.

அப்புறம் பாஸ் இளைஞர்களுக்கு மட்டும் அல்ல எல்லோருக்கும் மெலோடி கிங் ஹரிஸ்ஜெயராஜ் தான். ஏன்னா, பல இசையமைப்பாளர்கள் வந்தாலும், ஹாரிஸின் டச் என்று சொல்லும் பல பாடல்கள் இன்றும் பிளே லிஸ்டில் முன்னணி வரிசையில் இருக்கின்றன

. ஹாரிஸுக்கான இடம் தமிழ் சினிமாவிலும், ரசிகர்களின் பேவரைட் லிஸ்டிலும் அப்படியே இருக்கின்றன அதானால் தான் அவர் மெலடி கிங்