இனிமேல் நாங்க கணவன் மனைவி அல்ல - விவாகரத்தை அறிவித்த பிரபல இசையமைப்பாளர் அதிர்ச்சியில் திரையுலகம்

musicdirector divorcedwife
By Irumporai Dec 29, 2021 05:22 AM GMT
Report

பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளரான டி. இமான் தனது மனைவியை விவாகரத்து செய்து உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அவரின் இந்த திடீர் அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக திகழும் இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில், என்னுடைய நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்கள் அனைவருக்கும் நான் ஒன்றை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். வாழ்க்கை என்பது பல்வேறு பாதைகளை கொண்டது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம்.

நானும் எனது மனைவி மோனிகா ரிச்சர்ட் அவர்களும் சட்டபூர்வமாக கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். நாங்கள் இருவரும் இனிமேல் கணவன் மனைவி அல்ல.

இது குறித்து எனது நல விரும்பிகள் மற்றும் இசை ரசிகர்களிடம் கேட்டுக்கொள்வது என்னவென்றால் எங்களது தனிப்பட்ட இந்த முடிவுக்கு மதிப்பளித்து எங்களது அடுத்தகட்ட வாழ்விற்கு செல்லும் வகையில் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் டி இமான் ரசிகர்களுக்கு மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.