காயத்ரி ரகுராம் பதவியில் இனி இசையமைப்பாளர் - அண்ணாமலை அதிரடி!
காயத்ரி ரகுராம் வகித்து வந்த பதவியை இசை அமைப்பாளர் தினாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
காயத்ரி நீக்கம்
தமிழக பாஜக கட்சி மாநில தலைவர் அண்ணாமலைக்கும் கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக இருந்த காயத்ரி ரகுராமுக்கும் இடையே அவ்வப்போது மோதல் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் கட்சியில் தன்னிச்சையாக செயல்பட்டு தலைமையின்
ஒப்புதல் இல்லாமலேயே தனக்கு கீழ் இருந்த நிர்வாகிகளை காயத்ரி ரகுராம் நீக்கியதால் அவரையே அந்த பொறுப்பில் இருந்து நீக்கி அண்ணாமலை உத்தரவிட்டிருந்தார். தொடர்ந்து, வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டது.
தீனாவுக்கு பதவி
சூர்யா சிவா, டெய்சி சரண் ஆடியோ விவாகரத்தில் தலைமையை கடுமையாக விமர்சித்தார். இதனால், அவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவராக இசையமைப்பாளர் தினா நியமிக்கப்படுகிறார்.
மாநிலத் துணைத் தலைவராக ஆனந்தன் ஐயாசாமி நியமனம் செய்யப்படுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது.