‘’ஜித்து ஜில்லாடி மிட்டா கில்லாடி’’ - சையத் முஷ்டாக் அலி கோப்பை , மீண்டும் தட்டி தூக்கிய தமிழ்நாடு

2021 mushtaqalitrophy tamilnaduwins
By Irumporai Nov 22, 2021 10:32 AM GMT
Report

சையத் முஸ்தாக அலி கோப்பை கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தக்க வைத்தது தமிழக அணி.

கர்நாடக அணிக்கு எதிரான இறுதி போட்டியில் கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது தமிழக அணி கடைசிப் பந்தில் தமிழக அணி வீரர் ஷாருக்கான் அடித்த சிக்ஸ்ரால் கோப்பையை வென்றது.

டெல்லியில் நடந்த இறுதி போட்டியில் கர்நாடகாவை 4 விகெட் வித்யாசத்தில் வீழ்த்தியது தமிழக அணி.

கர்நாடக அணியில் அதிகபட்சமாக அபினவ் மனோகர் 46, பிரவீன் துபே 33 ரன்கள் எடுத்தனர். தமிழக அணியில் அதிகபட்சமாக நாராயண் ஜெகதீசன் 41, ஷாருக்கன் 33,ஹரி நிஷாந்த் 23 ரன் எடுத்தனர்.   

2019 ஆம் ஆண்டு சீசனில் கர்நாடகாவும் தமிழ்நாடுமே இறுதிப்போட்டியில் மோதியிருந்தது.

அந்த போட்டியில் கர்நாடகா 1 ரன் வித்தியாசத்தில் வென்றிருக்கும். கிட்டத்தட்ட அந்த போட்டியை போன்றே நெருக்கமாக சென்ற இந்த போட்டியை ஷாரூக்கானின் அதிரடியால் தமிழ்நாடு சிறப்பாக வென்றிருக்கிறது. மூன்றாவது முறையாக தமிழ்நாடு சாம்பியன் ஆகியிருக்கிறது.

கடந்த சீசனிலும் தமிழ்நாடே சாம்பியனாக இருந்தது குறிபிடத்தக்கது.