சர்க்கரை நோய்,இதய நோய்களை கட்டுப்படுத்த உதவும் காளான்..!

Diabetes Control SugarPatient நீரிழிவுநோய் உடல்ஆரோக்கியம் சர்க்கரைநோய் Mushrooms இதயநோய் காளான்
By Thahir Apr 12, 2022 10:49 AM GMT
Report

சர்க்கரை நோய் மற்றும் இதய நோய்களை கட்டுப்படுத்த காளான் வகை உணவுகள் உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சமையலில் இன்று காளான் முக்கிய உணவாக பங்கு வகித்து வருகிறது.காளான்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

அன்றாட நம் உணவில் காளானை சேர்த்துக் கொண்டால் நமது குடலின் ஆரோக்கியத்திற்கு நல்லது என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கிறது.

சர்க்கரை நோய்,இதய நோய்களை கட்டுப்படுத்த உதவும் காளான்..! | Mushrooms Control Diabetes Heart Issue

காளான்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து மாசசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தின் ஆம்ஹெர்ஸ்ட் ஊட்டச்சத்து நிபுணரான ஜென்ஹுவா லியுவின் தனது ஆராய்ச்சியில் கண்டறிந்துள்ளார்.

டைப் - 2 நீரிழிவு நோய்,இதய நோய்,சில புற்றுநோய்கள் மற்றும் பிற நாள்பட்ட பிரச்சனைகளையும் மேற்கண்ட நோய்களையும் காளான்கள் தடுக்க உதவுகிறது.

குடல் செயலிழப்பு WSD தொடர்பான நோய்களின் வளர்ச்சிக்கு மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் பங்களிக்கும் அடிப்படை வழிமுறைகளில் ஒன்றாக கருதப்படுகிறது,” என்று லியு கூறியுள்ளார்.

உலகின் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் சன்ட்ரைடு சிப்பி காளான்களில் தாதுக்கள்,உணவு நார்ச்சத்து மற்றும் வைட்டமின் டி ஆகியவை அடங்கியுள்ளது.

காளான் ஊட்டச்சத்து மிக்க ஒன்றாக இருந்து வரும் உணவாக இருந்து வருகிறது. இதை நம் உணவில் எடுத்துக்கொண்டால் இதய நோய்,சர்க்கரை நோய்,உள்ளிட்ட பல நோய்களை கட்டுப்படுத்த இந்த காளான் வகை உணவுகள் உதவுகின்றன.