9 ஆண்டுகளுக்குப் பின் ஐஸ்வர்யா வாழ்வில் நடக்கப்போகும் நல்ல விஷயம் - ரசிகர்கள் மகிழ்ச்சி
இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கியுள்ள ஆல்பம் பாடல் இன்று வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷூம் காதலித்து கடந்த 2004 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதியினருக்கு யாத்ரா, லிங்கா என மகன்கள் உள்ள நிலையில் இருவரும் பிரிவதாக கடந்த ஜனவரி மாதம் தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இரண்டு குடும்ப உறுப்பினர்களும் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே இந்த பிரச்சனையிலிருந்து விடுபட மீண்டும் திரையுலக பணிகளில் ஈடுபட்டுள்ள ஐஸ்வர்யா நீண்ட இடைவெளிக்குப் பிறகு முசாஃபிர் என்ற ஆல்பம் பாடலை இயக்கியுள்ளார். இப்பாடல் பிப்ரவரி 14, மார்ச் 8 ஆம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டு பின் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில் முசாஃபிர் பாடல் மார்ச் 17 ஆம் தேதியான இன்று மாலை 4.44 மணிக்கு வெளியாகவுள்ளதாக ஐஸ்வர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் 9 ஆண்டு காத்திருப்புகளுக்குப் பின் தனது முதல் சிங்கிள் வெளியாகிறது. அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள என்னால் காத்திருக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
And finally the wait it over …my first single #payani after a long 9 year gap ,in Tamil is releasing tomorrow..can’t wait to share it with you @anirudhofficial let’s rock ! pic.twitter.com/klMWhyQejB
— Aishwaryaa.R.Dhanush (@ash_r_dhanush) March 16, 2022