தேமுதிக விலகலால் பாஜக அதிக இடங்களில் போட்டியிட வாய்ப்பு உள்ளதா? எல்.முருகன் பளீச் பதில்
அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இதனையடுத்து, தேமுதிக- அதிமுக இடையே நடந்த மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகளும் பலனளிக்காததால் அதிமுக கூட்டணியிலிருந்து தேமுதிக விலகி இருக்கிறது. தேமுதிக விலகலால் பாஜக அதிக இடங்களில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பதிலளித்து பேசியுள்ளார்.
இது குறித்து எல்.முருகன் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “எங்கள் கூட்டணி பலமிக்க கூட்டணியாக இருக்கிறது. எந்த நேரத்திலும் எங்கள் கூட்டணிக்கான வெற்றி கிடைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும்.

தேமுதிக விலகல் குறித்து தேசியத் தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதைப் பின்பற்றுவோம். இன்னும் அதுபற்றி எங்களுக்குத் தகவல் வரவில்லை. எந்த ஒரு சிக்கலும் இல்லை. எல்லாமே சுமுகமாக நடந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாகும்” என்றார்.