முருகன் ,நளினி உறவினர்களுடன் வீடியோகால் பேசஅனுமதி!

murugan nalini videocall
By Irumporai Jun 17, 2021 10:48 AM GMT
Report

முருகன், நளினி ஆகியோர் தங்களது உறவினர்களுடன் வீடியோ கால் மூலம் பேசிக்கொள்ள சென்னை உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் தண்டனை பெற்று வரும் முருகன், நளினி ஆகியோர் வெளிநாடுகளில் உள்ள தங்களது உறவினர்களுடன் வீடியோகால் மூலம் பேசிக்கொள்ள உயர்நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

சமீபத்தில் முருகன்  மற்றும் நளினியும் பரோலுக்கு விண்ணப்பிருந்தனர் அவர்களது பரோல் நிராகரிக்கப்பட்டது.

  இந்த நிலையில், வெளிநாட்டில் உள்ள முருகனின் தாயார் மற்றும் சகோதரியிடம் வீடியோ கால் மூலம் முருகன் மற்றும் நளினி ஆகியோரை பேச அனுமதிக்க வேண்டுமென நளினியின் தாயார் பத்தமா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கை  விசாரித்த நீதிமன்றம்  முருகனும் நளினியும் வெளிநாட்டில் உள்ள முருகனின் தாயார் மற்றும் சகோதரியிடம் வீடியோ கால் மூலம் பேச தினமும் 10 நிமிடங்கள் பேச அனுமதிக்கலாம் என தீர்ப்பளித்துள்ளது