பெருசா கவலையும் இல்லை, ரொம்ப சந்தோஷமும் இல்லை: பாஜக தலைவர் எல்.முருகன்
தமிழக தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடக்கவுள்ளது இதனால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்கிறது. தமிழக அரசியல் கட்சிகள் கூட்டணி கட்சிகளோடு தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் அதிமுக கூட்டணியை பொருத்தவரையில் 170 இடங்கள் அல்லது அதற்கும் மேலாக அதிமுக நிற்க முடிவு செய்துள்ளது.

இதில் கூட்டணி கட்சிகளான பாமகவுக்கு 23இடங்கள் பாஜகவுக்கு 20 இடங்கள் அதிமுக ஒதுக்கியுள்ளது. மற்றொரு கட்சியாம தேமுதிகவுடன் பேச்சு வார்த்தை இழுபறியில் உள்ளது. இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன், அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதற்கு கவலையோ சந்தோஷமும் ஒன்றுமில்லை.
ஒதுக்கப்பட்ட 20 தொகுதிகளில் எங்களுடையவெற்றிக்காக பாடுபடுவோம் என தெரிவித்துள்ளார். அதேசமயம் தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வருவோம்.
பாஜக போட்டியிடும் தொகுதிகள் வேட்பாளர்கள் குறித்து விவரம் விரைவில் வெளியாகும் என தெரிவித்துள்ளார்.