முருகனை தமிழ் கடவுளாக அறிவியுங்கள்.! வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம்

religion tamilnadu hindu
By Jon Feb 11, 2021 01:55 PM GMT
Report

முருகனை தமிழ் கடவுளாக அறிவிக்க வேண்டும் என தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திருமுருகன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அதில் முருகனை தமிழ் கடவுளாக அங்கீகரிக்க வேண்டும் என அரசாங்கத்திடம் மனு அளித்துள்ளதாகவும் அதன் மீது நடவடிக்கை எடுக்காததால் நீதிமன்றத்தை நாடியதாக தெரிவித்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் எஸ்.ஆனந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரணை ஏற்றுக்கொண்டால் அது இந்த நாட்டின் மதச்சார்பற்ற தன்மையை பாதிப்புக்குள்ளாகும் எனக்கூறியுள்ளார்.

மேலும் முருகன் ஒருவரை மட்டுமே தமிழ் மொழியின் ஒட்டுமொத்த கடவுளாக கருத முடியாது என்றும் அந்த தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.