சைகோ கொலைகாரன் சப்பாணிக்கு வாழ்நாள் சிறை தண்டனை - நீதிமன்றம் அதிரடி..!

Tamil Nadu Police Tiruchirappalli Death
By Thahir Aug 08, 2023 07:38 AM GMT
Report

திருச்சி அருகே நகைக்காக அடுத்தடுத்து 8 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 கொலைகளுக்கு மட்டும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகைக்காக 8 பேர் கொலை 

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் நடுத்தெருவைச் சேர்ந்தவர் தங்கதுரை (34) கார் ஓட்டுநரான இவர் 2016 ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற நிலையில் மீண்டும் வீடு திரும்பவில்லை.

இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து தங்கத்துறையின் செல்போனை கிருஷ்ணசமுத்திரத்தைச் சேர்ந்த சப்பாணி (35) என்பவர் பயன்படுத்தியது தெரியவந்தது.

இதையடுத்து சப்பாணியை பிடித்து விசாரித்த போது, 2 பவுன் தங்க நகைக்காக தங்கதுரையை கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார்.

பின்னர் கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் உள்ள வாய்க்கால் கரையில் புதைக்கப்பட்டிருந்த தங்கதுரை உடல் தோண்டி எடுக்கப்பட்டது. சப்பாணியின் மீது மேலும் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

விசாரணையில் இதேபோல தனது தந்தை தேக்கன் (75), திருவெறும்பூர் மேலகுமரேசபுரத்தைச் சேர்ந்த கோகிலா (70), பாப்பாக்குறிச்சியைச் சேர்ந்த அற்புதசாமி (70), கீழ குமரேசபுரத்தைச் சேர்ந்த விஜய் விக்டர் (27) , கூத்தப்பாரை சேர்ந்த சத்தியநாதன் (45), பெரியசாமி (75) வடகாடு விஸ்வம்பாள் சமுத்திரத்தைச் சேர்ந்த அதிமுக கவுன்சிலர் குமரேசன் (50) என மேலும் 7 பேரை நகைக்காக சப்பாணி கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.

சைகோ கொலைகாரனுக்கு  வாழ்நாள் சிறை தண்டனை 

இதையடுத்து கொலை செய்யப்பட்டவர்களின் உடல்கள் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதில் தங்கதுரை, சத்தியநாதன் ஆகியோர் கொலைக்கான வழக்குகளில் நீதிபதி கே.பாபு நேற்று தீர்ப்பளித்தார். அவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Murderer Chapani sentenced to life imprisonment

இதைதொடர்ந்து சப்பாணி திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் சவரிமுத்து ஆஜராகி வாதாடினார்.

மேலும் அவர் மீது உள்ள மற்ற 6 கொலை வழக்குகளிலும் ஓரிரு நாட்களில் தீர்ப்பு வழங்கப்படலாம் என வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.